தமிழகக் கோயில்கள்: 1. குரங்கணி அருள்மிகு முத்துமாலை அம்மன்
குறைவில்லா வாழ்வருளும்
குரங்கணி அருள்மிகு முத்துமாலை அம்மன்
- முனைவர் ரத்னமாலா புரூஸ்
அன்னை பராசக்தியின் அம்சமாகக் குரங்கணி என்னும் திருத்தலத்தில் கொலுவீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றாள் முத்துமாலை அம்மன். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இத்திருத்தலமானது மிகப் பிரசித்தி பெற்றது. பத்து நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பெறும் இத்திருவிழாவிற்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் மக்கள் வந்து அம்மனின் அருள் பெற்றுச் செல்கிறார்கள். இதன் சிறப்பை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தலத்தின் தேவியைத் தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் நிகழ்வது ஏற்றங்கள் மட்டுமே. அத்துணை சக்தி வாய்ந்தவள் முத்துமாலை அம்மன். பசிப்பிணி, நோய்ப்பிணி, வறுமைப்பிணி மற்றும் இடர்ப்பிணி யாவும் தீர்ப்பாள் அன்னை. வாருங்கள் ஒருமுறை வந்து தரிசியுங்கள். அம்மனின் அருள் பெறுங்கள்!
இத்திருத்தலத்தின் வரலாறு மற்றும் அனைத்து விவரங்களும் எமது குரலில் காணொளியாகப் பின்வரும் இணைப்பில் உள்ளன. கண்டு மகிழுங்கள்!!!
Comments
Post a Comment