தமிழகக் கோயில்கள்: 2. உத்திரகோசமங்கை ஸ்ரீ மங்கள நாயகி சமேத மங்களநாதர் திருக்கோயில் (உலகின் முதல் சிவாலயம்)

உலகின் முதல் சிவாலயம்
உலகிலேயே முதலில் தோன்றிய கோயில்
உத்திரகோசமங்கை
ஸ்ரீ மங்கள நாயகி சமேத மங்களநாதர் திருக்கோயில்
- முனைவர் ரத்னமாலா புரூஸ்


    எம்பெருமான் ஈசனுக்கு உலகெங்கும் திருக்கோயில்கள் இருந்தாலும் உலகின் முதல் சிவாலயம் என்ற பெருமை கொண்டது உத்திரகோசமங்கையில் அமைந்திருக்கும் சிவாலயம். "மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது" என்கிறார்கள். சிதம்பரத்துக்கு அடுத்தபடியாக முக்கியமான திருத்தலமாக விளங்கும் இது ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 
    
    சுமார் இருபது ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இத்திருக்கோயிலின் மூலவர் சுயம்புலிங்கமானது 3000 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. இராவணன்-மண்டோதரி திருமணம் இங்கேதான் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தத் திருத்தலத்தில் சுவாமியை அம்பாள் அனுதினமும் பூஜை செய்வதாக ஐதீகம்! சொக்கலிங்கப் பெருமான் அம்பிகையைப் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அவளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே அவளுக்கு  வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர்  மதுரைக்கு வந்ததாக மதுரைப் புராணம் தெரிவிக்கிறது. 

     சிவபெருமானின் சொந்த ஊரெனப் புகழப்படும் உத்திரகோசமங்கை திருத்தலத்தின் வரலாற்றையும்  அற்புதங்களையும் ஆச்சர்யங்களையும் எமது குரலில் பின்வரும் இணைப்பில் அறிந்துகொள்ளுங்கள்! ஈசனின் அருள் பெறுங்கள்! ஓம் நமசிவாய!







Comments